திருவண்ணாமலை

போலீஸார் துரத்தியதால்கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் சாவு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே வெள்ளிக்கிழமை இரவு சூதாடியவர்களை போலீஸார் துரத்தியபோது, கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பெரியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (30). இவர், தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து வெள்ளிக்கிழமை இரவு கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் உள்ள லட்சுமியின் நிலத்துக்கு வந்துள்ளார். பின்னர், அனைவரும் சேர்ந்து காசு வைத்து சூதாட்டம் ஆடியதாகத் தெரிகிறது.
 நள்ளிரவு 1.30 மணிக்கு கீழ்பென்னாத்தூர் போலீஸார் அந்த வழியே ரோந்து சென்றனர். போலீஸாரைப் பார்த்ததும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தப்பி ஓடியுள்ளது.
 அப்போது, போலீஸார் துரத்தியதால் அருகில் இருந்த கிணற்றில் பாஸ்கர் தவறி விழுந்தாராம். இதைக் கவனித்த போலீஸார், கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் இருந்த பாஸ்கரை மீட்டனர்.
 பின்னர், அவசர ஊர்தி மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாஸ்கர் அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
 இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார். தப்பியோடிய 5 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT