ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சி

அனக்காவூர் வட்டார வள மையத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.

அனக்காவூர் வட்டார வள மையத்தில் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் குறித்த பயிற்சி திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.
 திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் வழிகாட்டுதலின்படி, அனக்காவூர் வட்டார வள மையத்தில் நடைபெற்ற பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரா.சக்திவேல் தொடக்கிவைத்தார்.
 அப்போது, மாணவர்களின் வாசிப்புத் திறனையும், எழுதுதல் திறனையும் மேம்படுத்தும் வகையில், வகுப்பறையில் ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறன் மேம்பட வேண்டும் எனவும், கற்றல், கற்பித்தல் திறன் வகுப்பறையில் மேம்பட்டால்தான் மேல் வகுப்புகளில் மாணவர்களின் வாசித்தல் திறன் மேம்படும் என்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரா.சக்திவேல் தெரிவித்தார்.
 பயிற்சியின் கருத்தாளர்களாக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கே.வேல்முருகன், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஏ.கமலக்கண்ணன், எம்.தினேஷ்பாபு, வெ.அம்பிகா ஆகியோர் செயல்பட்டனர். இந்தப் பயிற்சியில் 87 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 115 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com