குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எம்.ஜெயஸ்ரீராணி தலைமை வகித்தார். பேராசிரியர் பா. டேனியல் சுந்தரராஜ் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் த. கஜபதி, கல்வியாளர்கள் வ. முருகவேல், பார்கவி கருணாகரன் ஆகியோர் கற்பித்தல் முறைகள் குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.