மண்டல யோகா, விளையாட்டுப் போட்டிகள்: டிடிஇஏ பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தில்லியில் மண்டல அளவிலான யோகா, விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்


தில்லியில் மண்டல அளவிலான யோகா, விளையாட்டுப் போட்டிகளில் தில்லி தமிழ்க் கல்விக் கழகப் (டிடிஇஏ) பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக டிடிஇஏ வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கரோல் பாகில் உள்ள பாபா ராம் தேவ் கன்யா வித்யாலயாவில் அண்மையில் நடத்தப்பட்ட குழு யோகா போட்டியில் டிடிஇஏ பூசா சாலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 12- ஆம் வகுப்பு மாணவி மஞ்சு முதல் பரிசும், இசையுடன்கூடிய யோகா போட்டியில் 12-ஆம் வகுப்பு மாணவர் புனித் மூன்றாம் பரிசும், 8 -ஆம் வகுப்பு மாணவர் பிரதம் 2-ஆம் பரிசும், தனி நபர் யோகா போட்டியில் 9 -ஆம் வகுப்பு மாணவர் நிதின் குமார் 2-ஆம் பரிசும் பெற்றனர்.
தில்லி கல்வி இயக்ககம் சார்பில் டி.ஐ. கான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மண்டலம் 28-இல் உள்ள பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் பூசா சாலைப்பள்ளி மாணவர்கள் தொடர் ஓட்டத்தில் சீனியர் பிரிவில் மூன்றாம் பரிசையும், ஜூனியர் பிரிவில் இரண்டாம் பரிசையும் பெற்றனர். 8- ஆம் வகுப்பு மாணவர் சைமன்
200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் பரிசும் பெற்றார். இரண்டாம் வகுப்பு மாணவர் வசந்த் குமார் தவளை ஓட்டத்தில் முதல் பரிசு பெற்றார்.
சப்ஜூனியர் பிரிவில் டிடிஇஏ மந்திர்மார்க் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் துஷார் 200 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் மூன்றாம் பரிசு, தருண் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசு பெற்றனர்.
ஜூனியர் பிரிவில் கோ-கோ போட்டியில் மூன்றாம் பரிசையும் சப் ஜூனியர் பிரிவில் மூன்றாம் பரிசையும் இப்பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர்.
சீனியர் பிரிவில் துஷார் மனான் (11 ஆம் வகுப்பு) 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசு, 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு, நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார். அனிகேத் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் பரிசைப் பெற்றார். சீனியர் மற்றும் சப்- ஜூனியர் பிரிவுகளில் 400-க்கு100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இரண்டாம் பரிசு, 400 -க்கு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல் பரிசும் பெற்றுள்ளனர்.
சுபாங்கர் ஹோல்டா (10-ஆம் வகுப்பு) 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு, 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் பரிசும் பெற்றார்.
பிரேம் (10 ஆம் வகுப்பு) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் பரிசு, 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல்பரிசும் வென்றார். முகம்மது சுபேர்( 10 ஆம் வகுப்பு) நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றம் பரிசு, 800 மீ ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் பரிசு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு, 3,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசும் வென்றார். ஜெய் சூர்யா (10 ஆம் வகுப்பு) தடை ஓட்டத்தில் மூன்றாம் பரிசு, 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசும் வென்றார்.
மண்டல அளவில் அதிகமான பரிசுகளைப் பெற்று மந்திர்மார்க் பள்ளி மாணவர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர். பரிசு பெற்ற மாணவர்களை டிடிஇஏ செயலர் ஆர். ராஜு பாராட்டினார் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com