டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இளைஞர் சாவு

குடியாத்தம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். 

குடியாத்தம் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். 
குடியாத்தத்தை அடுத்த முக்குன்றத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ் (25). இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாம். உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி உள்ளது என கூறினர். இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே தர்மராஜ் இறந்தார். தகவலின்பேரில் வருவாய், காவல் துறையினர் புதன்கிழமை முக்குன்றம் கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com