வேலூர்

கஜா புயல்: உஷார் நிலையில் இருக்க காவல் குழுக்களுக்கு எஸ்.பி. உத்தரவு

DIN

கஜா புயலையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் குழுவினர் உஷார் நிலையில் இருக்கும்படி எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
நாகை அருகே கஜா புயல் வியாழக்கிழமை இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி அதன் அருகே உள்ள மாவட்டங்களிலும் அதிக அளவில் மழை வாய்ப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்நிலையில், புயலையொட்டி பாதிப்புகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேலூர் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் தலா 10 பேர் கொண்ட காவல் குழுவினர் தயார் நிலையில் இருக்கும்படி எஸ்.பி. பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 
மேலும், புயலையொட்டி பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மரம் அறுக்கும் இயந்திரங்கள், கயிறு, லாரி டியூப் உள்ளிட்ட மீட்பு உபகரணங்களையும் தயாராக வைத்திருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் 25 பேர் கொண்ட 3 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்தக் குழுவினர் மின்வாரியம், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களுடன் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசியில் ண்ய்ள்ம்ஹழ்ற் என்ற செயலி மூலம் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT