வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

பள்ளிகளுக்கு இடையே குழந்தைகளுக்கான போட்டிகள்

DIN | Published: 18th November 2018 11:50 PM


பள்ளிகளுக்கு இடையேயான குழந்தைகளுக்கான போட்டிகள் வேலூர் சிருஷ்டி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.
வேலூர் சிருஷ்டி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிருஷ்டி கிட்ஸ்-2018' எனும் பள்ளிகளுக்கு இடையே குழந்தைகளுக்கான போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. சிருஷ்டி பள்ளிக் குழுமங்களின் செயலர் முரளிதரன் தலைமை வகித்தார். பள்ளிக் குழுமங்களின் தலைவர் எம்.எஸ்.சரவணன், கல்வி ஆலோசகர் கீதா நந்தகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.
இதில், கலை சொல்லல், பாடல், கிராமிய நடனம், ஓவியம், வண்ணம் தீட்டுதல், கட்டுரை எழுதுதல், பேச்சுப் போட்டி, காய்கனிகளின் மூலம் கலைகளை உருவாக்குதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இவற்றில், 8 பள்ளிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு ஆட்சியரின் மனைவி தேவி ராமன் பரிசுகளை வழங்கினார். பல்வேறு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். சிருஷ்டி மெட்ரிக். பள்ளி முதல்வர் எஸ்.பூர்ணிமா நன்றி கூறினார்.

 

More from the section

கைதிக்கு செல்லிடப்பேசி அளித்த சிறைக் காவலர் பணியிடைநீக்கம்
குப்பைகளைத் தரம்பிரித்து வழங்க பெற்றோருக்கு வீட்டுப் பாடம்: பள்ளி மாணவர்கள் மூலம் பெற நடவடிக்கை
வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
மண்டல யோகா, விளையாட்டுப் போட்டிகள்: டிடிஇஏ பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்
வேலூர் விமான நிலையத்தில் தகவல் பரிமாற்ற சிக்னல் சோதனை