வேலூர்

சாலை விபத்துகள் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

DIN


சாலை விபத்துகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பசுமைத் தாயகம் சார்பில், சாலை விபத்துகளில் உயிரிழப்போர் நினைவு நாள் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், தமிழக சாலை விபத்துகளில் உயிரிழந்தோருக்கு பழைய பேருந்து நிலையம் முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, பாமக மாநில துணை பொதுச்செயலர் கே.எல்.இளவழகன் தலைமை வகித்துப் பேசுகையில், நாட்டில் சாலை விபத்துகள் அதிகளவில் நிகழும் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். சாலை விபத்துகளில் ஒருவர் உயிரிழந்தால், 5 பேர் படுகாயம் அடைகின்றனர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் துயரத்தை சந்திக்கின்றனர்.
இந்த விபத்துகளால் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாகும்.
சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்த நெடுஞ்சாலை கருப்புப் பகுதிகளை உடனடியாக சரி செய்திட வேண்டும், அதிவேக பயணத்தையும், மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும் தடுத்திட வேண்டும், தமிழகத்தில் சாலை விபத்தைக் கட்டுப்படுத்த முறையாக சாலை பாதுகாப்புக் கொள்கையை செயல்படுத்த வலியுறுத்தி இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது என்றார்.
மாநில துணைத் தலைவர்
என்.டி.சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர்கள் வெங்கடேசன், ஜி.கே.ரவி, மாநில துணைத்தலைவர் பி.கே.ரமேஷ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT