வேலூர்

சோளிங்கர் மலைக் கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

DIN

சோளிங்கர் யோக நரசிம்மர் கோயிலில் கார்த்திகை மாத திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ஆண்டு முழுவதும் யோக நிலையில் கண்மூடி இருக்கும் யோக நரசிம்மர், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பார் என்பது ஐதீகம்.
கார்த்திகை திருவிழாவுக்கு முன் புரட்டாசி, ஐப்பசி ஆகிய இரு மாதங்களும் ஸ்ரீஅமிர்தவல்லி தாயார் மலைக்கோயிலில் இருந்து இறங்கி வந்து, கீழே உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் அருள்பாலிப்பார்.
இது வருடந்தோறும் இரண்டு மாதம் மட்டும் நடைபெறும். இதையடுத்து, ஐப்பசி கடைசி வெள்ளிக்கிழமையில் சிறப்பு உற்சவங்கள் நிகழ்த்தப்பட்டன. திங்கள்கிழமை அமிர்தவல்லி தாயார் மலைக்கு புறப்படுவார். இவரை மலையடிவாரம் வரை சென்று லட்சுமிநரசிம்மர் வழியனுப்புவார். இது வருடந்தோறும் நடைபெறும் உற்சவம் ஆகும்.
இந்நிலையில், இந்தாண்டு கார்த்திகை திரு விழா, பெரியமலை, சிறிய மலை இரு இடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கண் திறந்த யோக நரசிம்மரை பக்தர்கள் தரிசித்தனர். யோக நரசிம்மருக்கும், யோக ஆஞ்சநேயருக்கும் விசேஷ திருமஞ்சனமும், விசேஷ அலங்காரத்தில் உற்சவங்களும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அமிர்தவல்லி தாயார், யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் மூவருக்கும் தங்க ரத உலா நடைபெறும்.
கார்த்திகை மாதம் முழுவதும் யோக நரசிம்மர் கண் திறந்து இருப்பார் என்பதால், இம்மாதம் முழுவதும் காலை 5 முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி தரிசனத்துக்காக பக்தர்கள் காலை 3.30 மணி முதலே மலை ஏறத் தொடங்கினர். பெரியமலை, சிறிய மலை இரு கோயில்களிலும் காலை 5 மணிக்கு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் க.பெ.அசோக்குமார், செயல் அலுவலர் ச.சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்துசமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT