போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள கற்றலுடன் கருத்து பரிமாற்றம் அவசியம்'

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள படிப்பது மட்டுமின்றி தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடுவதும், கருத்துப்


போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள படிப்பது மட்டுமின்றி தங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடுவதும், கருத்துப் பரிமாற்றம் செய்வதும் அவசியமாகும் என்று அகில இந்திய வானொலி நிலையத்தின் சென்னை செய்திப்பிரிவு இயக்குநர் வி.பழனிச்சாமி தெரிவித்தார்.
பிளஸ் 2 மாணவர்கள் போட்டித் தேர்வுளை எதிர்கொள்வது குறித்தும், தேர்வுகளில் புதிய உத்திகளை கையாள்வது குறித்த கருத்தரங்கம் வேலூர் மாவட்டம் மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில், அகில இந்திய வானொலி நிலையத்தின் சென்னை செய்திப்பிரிவு இயக்குநர் வி.பழனிச்சாமி பேசியதாவது:
வளர்ந்து வரும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருபவர்கள் இளைஞர்கள். அத்தகைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் காலத்துக்கு ஏற்ற தரமான கல்வியை அரசு அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன. அவற்றை மாணவர்கள் வெளிக்கொணர வேண்டும்.
தங்கள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து கல்வியில் அதிய கவனம் செலுத்தி, படிப்பில் முன்னேற வேண்டும். போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுத்து பழகிடும் போது, படிப்பில் கவனம் செலுத்தி வெற்றி பெற முடியும். நவீன கணினி உலகத்தில் மாணவர்கள் தீய பழக்கவழக்கங்களுக்கு ஆட்படாமல் நல்ல சிந்தனைகளையும், கருத்துக்களையும் எடுத்துக்கொண்டு கல்வி கற்க வேண்டும். மாணவர்களுக்குப் போட்டி மனப்பான்மை இருக்க வேண்டும். பொறாமை மனப்பான்மை இருக்க கூடாது. இதைக் கடைப்பிடித்தால் கல்வியிலும் வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் சழைத்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து தங்களுக்குள் உள்ள திறமையை வெளிக்கொணர வேண்டும். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தன்நம்பிக்கையுடன் படித்து தேர்வுகளை எழுத வேண்டும். படிப்பது மட்டுமின்றி தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை மற்ற மாணவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமாகவும், கருத்து பரிமாற்றம் செய்யும் போதும் அந்த கருத்துக்கள் மனதில் நிலையாக இருக்கும் என்றார் அவர்.
தொடர்ந்து, கனரா வங்கி சார்பில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. மேலும், உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு வங்கிகள் அளிக்கும் கடனுதவிகள் குறித்த விளக்கங்களை வங்கியாளர்கள் வழங்கினர்.
முன்னதாக, கருத்தரங்கிற்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், கனரா வங்கி மண்டல மேலாளர் திலக்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com