புதன்கிழமை 12 டிசம்பர் 2018

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு: காவல் நிலையத்தை  முற்றுகையிட்ட பொதுமக்கள்

DIN | Published: 12th September 2018 01:11 AM

வாணியம்பாடியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காவல் நிலையத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
வாணியம்பாடி சலாமாபாத் பகுதியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு கோபுரம் அமைத்தால் கதிர்வீச்சு மற்றும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் எனக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்
கிழமை அப்பணியை தடுத்து நிறுத்த முயன்றனர். 
இருப்பினும் பணிகள் தொடர்ந்து நடைபெறதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்து, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
 

More from the section

சாலை விதிமீறலைத் தடுக்க நவீன கண்காணிப்பு வாகனம்
பைக் மோதி பெண் சாவு
பள்ளிக்கு ரூ.10 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு
3 மாநில பேரவைத் தேர்தலில் வெற்றி: காங்கிரஸார் கொண்டாட்டம்
பாரதியார் பிறந்த நாள் விழா