சனிக்கிழமை 22 செப்டம்பர் 2018

பாஜக நிர்வாகி நியமனம்

DIN | Published: 12th September 2018 01:11 AM

பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலச் செயற்குழு உறுப்பினராக அரக்கோணத்தைச் சேர்ந்த டி.முத்துகுமரன்  நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை, மாநிலப் பொதுச் செயலாளர் பரிந்துரையின் பேரிலும், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதலின்பேரிலும் நியமித்து பிற்படுத்தப்பட்டோர் அணி மாநிலத் தலைவர் 
எஸ்.கே.கார்வேந்தன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
டி.முத்துகுமரன் ஏற்கெனவே வேலூர் கிழக்கு மாவட்டப் பொதுச் செயலர், அரக்கோணம் நகரத் தலைவர், வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

More from the section

3 பெண்கள் உள்பட மேலும் 32 கைதிகள் விடுதலை
ராணுவ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் செம்மரக் கட்டைகள் கடத்தல்


"ஓசோன் படலச் சிதைவைத் தடுக்க இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை அவசியம்'

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்


அரக்கோணத்தில் விரைவில் பலவகை சொத்துக் கடன் சேவை மையம் திறப்பு: பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் தகவல்