வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

விவசாயி வீட்டில் 8 சவரன் நகை திருட்டு

DIN | Published: 12th September 2018 01:13 AM

ஒடுக்கத்தூரில் விவசாயி வீட்டில் 8 சவரன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
ஒடுக்கத்தூர் பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி வேலு.  இவர் சனிக்கிழமை வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். 
மாலையில் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

மனுநீதி நாள் முகாம்களில் நலத்திட்ட உதவிகள்


சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்


தன்வந்திரி பீடத்தில் ஜப குபேர யக்ஞம் தொடக்கம்

பொய்கை சுற்றுச்சாலைக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு: ஆட்சியர் ராமன் தகவல்
பாஜகவின் செயல்பாடுகளைத்தான் எதிர்க்கிறோம்: திருமாவளவன்