23 செப்டம்பர் 2018

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி  ரூ.10.50 லட்சம் மோசடி

DIN | Published: 12th September 2018 01:12 AM

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரியை ஏமாற்றி ரூ.10.50 லட்சம் பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
வாலாஜாபேட்டை வட்டம், திருப்பாற்கடல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (48). பட்டதாரியான இவர், வெளிநாட்டில் வேலை தேடி வந்தார். அப்போது, அறிமுகமான மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குமரேசன், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாபுவிடம் சில தவணைகளில் ரூ. 10.50 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கூறியபடி வெளிநாட்டில் வேலை வாங்கித் தராததுடன், பணத்தைத் திருப்பி அளிக்காமலும் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட பாபு, வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார். அதில், மோசடியில் ஈடுபட்ட குமரேசன் மீது நடவடிக்கை எடுக்கவும், பணத்தைத் திரும்பப் பெற்றுத் தரவும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

More from the section

தேசியத் தேர்வுகளுக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: துணைவேந்தர் க.முருகன்
குடிசை வீட்டில் தீ விபத்து

கண்டலேறு அணை திறப்பு: சென்னைக்கு ஒரு வாரத்தில் குடிநீர் வரும் வாய்ப்பு
 

புரட்டாசி முதல் சனிக்கிழமை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

வாக்காளர் பட்டியலில் பெயரை உறுதி செய்து கொள்ள வேண்டும்: ஆட்சியர்
எஸ்.ஏ.ராமன்