திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

130 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

DIN | Published: 12th September 2018 01:10 AM

வேலூர் மாவட்ட வாரியார் கல்வி, மருத்துவ அறக்கட்டளை சார்பில் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 11-ஆவது ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பு.க.சிவஞானம், சி.என்.தட்சிணாமூர்த்தி, ஜி.சீனிவாசன், என். மாணிக்கவாசகம், ஆர்.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தினர். செயலர் எம். தண்டபாணி வரவேற்றார். பொருளாளர் எஸ். தேவராஜ் உறுதிமொழி வாசித்தார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் 
கே.பி.கே. செல்வராஜ், பொருளாளர் எஸ். அருணோதயம், வழக்குரைஞர் கே.எம்.பூபதி, வேலூர் மேற்கு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத் தலைவர் சி.என்.தட்சிணாமூர்த்தி ஆகியோர் வேலூர்,  குடியாத்தம், ஆம்பூர், காட்பாடி, வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 130 மாணவர்களுக்கு கல்வி உதவிகளையும், நற்சான்றிதழ்களையும், சிறந்த ஆசிரியர்களையும், சமுதாய சான்றோர்களையும் பாராட்டி நினைவுப் பரிசுகள், பாராட்டுச் சான்றுகள் ஆகியவற்றையும் வழங்கினர்.

More from the section

சோளிங்கர் மலைக் கோயிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்
வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டடப் பணி: ஆட்சியர் ஆய்வு
சாலை விபத்துகள் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்
பள்ளிகளுக்கு இடையே குழந்தைகளுக்கான போட்டிகள்
தடகளப் போட்டியில் பள்ளி மாணவர் சாதனை