செல்லிடப்பேசி பறிமுதல்:  பெண் காவலரிடம் தீவிர விசாரணை

வேலூர் பெண்கள் தனிச் சிறைக்குள் பெண் காவலர் ஒருவர் செல்லிடப்பேசி கொண்டு சென்று பிடிபட்ட விவகாரத்தில்

வேலூர் பெண்கள் தனிச் சிறைக்குள் பெண் காவலர் ஒருவர் செல்லிடப்பேசி கொண்டு சென்று பிடிபட்ட விவகாரத்தில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பெண் காவலரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசி சிம்கார்டின் அழைப்புகள் தீவிர ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. 
சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசான வசதிகள் அளிக்கப்பட்ட விவகாரம் வெளியானதை அடுத்து  வேலூர் பெண்கள் சிறையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ராஜீவ் காந்தி கொலை கைதி நளினி உள்பட 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 15-ஆம் தேதி சிறைக்குள் செல்லிடப்பேசியை மறைத்து எடுத்துச் சென்ற 2-ஆம் நிலை காவலர் திலகவதி (55) சோதனையின்போது பிடிபட்டார். இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட திலகவதி மீது பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர், பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு செல்லிடப்பேசி கொடுத்து உதவியிருக்கலாம் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறையில் உள்ள நளினிக்கு உதவ அவர் செல்லிடப்பேசி கொண்டு சென்றிருக்கலாம் எனும் சர்ச்சையும் எழுந்துள்ளது. இதையடுத்து பெண் காவலர் திலகவதியிடம் கைப்பற்ற செல்லிடப்பேசியின் சிம்கார்டு தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் அந்த சிம்கார்டு எண்ணிலிருந்து சென்ற, வந்துள்ள அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com