ஏரிக்கரை தடுப்புச் சுவரை தரமாக கட்டக் கோரி கிராம மக்கள் போராட்டம்

வாணியம்பாடியை அடுத்த கனவாய்புதூர் பகுதியில் உள்ள ஏரியின் கரையை பலப்படுத்த கட்டப்பட்டு வரும்

வாணியம்பாடியை அடுத்த கனவாய்புதூர் பகுதியில் உள்ள ஏரியின் கரையை பலப்படுத்த கட்டப்பட்டு வரும் தடுப்புச் சுவரை தரமாகக் கட்டக் கோரி கிராம மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாணியம்பாடியை அடுத்த கனவாய்புதூர் பகுதியில் அமைந்துள்ள கோவிந்தாபுரம் ஏரி கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நிரம்பி வழிந்தது. அப்போது கரையின் ஒரு பக்கத்தில் உள்ள வாணியம்பாடி-கனவாய்புதூர் இணைக்கும் கிராம சாலை நீரில் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் நாள்தோறும் இவ்வழியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் 2 கி.மீ. தூரம் நியூடவுன் வழியாக வாணியம்பாடிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இச்சாலையைச் சீரமைக்க ஏரியின் கரையை பலப்படுத்த தடுப்புச் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் சிமென்ட் கலவை கலக்கப்படாத காரணத்தால் தடுப்புச் சுவரில் இருந்து ஜல்லிக் கற்கள் பெயர்ந்து விழுந்தன. 
இதையறிந்த அப்பகுதி மக்கள் தடுப்புச் சுவரை தரமாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால், தரமற்ற முறையிலேயே பணி நடந்து வருகிவதாகக் கூறி, ஒப்பந்ததாரரைக் கண்டித்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி, தரமான தடுப்புச் சுவரை அமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com