3 பெண்கள் உள்பட மேலும் 32 கைதிகள் விடுதலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, நன்னடத்தை அடிப்படையில் வேலூர் மத்திய சிறையில் இருந்து 7-ஆம் கட்டமாக 3 பெண் கைதிகள் உள்பட மேலும் 32 ஆயுள் தண்டனைக் கைதிகள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். இதன்படி, வேலூர் சிறையிலிருந்து மட்டும் இதுவரை 99 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் மத்திய சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, வேலூர் மத்திய சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகள், 15 பெண் கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது. இதில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி முதல் 6 கட்டங்களாக 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். 
இந்நிலையில், 7-ஆம் கட்டமாக 29 ஆண் கைதிகளும், வேலூர் பெண்கள் சிறையிலிருந்து முதல்முறையாக 3 பெண் கைதிகளும் என மொத்தம் 32 கைதிகள் வெள்ளிக்கிழமை காலை விடுவிக்கப்பட்டனர். இவர்கள் விடுதலை செய்யப்படுவது குறித்து வியாழக்கிழமை இரவே கைதிகளின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை சிறைக்கு வெளியே காத்திருந்த சிலரது உறவினர்கள், விடுதலை செய்யப்பட்ட கைதிகளை பார்த்ததும் கட்டி அணைத்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.
அந்தவகையில், வேலூர் மத்திய சிறையில் மட்டும் 7 கட்டங்களாக இதுவரை 99 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும், தமிழகத்தில் நடந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட யாரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com