இன்று புத்தகத் திருவிழா 

குடியாத்தம் மக்கள் மையம் சார்பில், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 நாள்கள் நடைபெறும் 2 ஆம் ஆண்டு

குடியாத்தம் மக்கள் மையம் சார்பில், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 10 நாள்கள் நடைபெறும் 2 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் மக்கள் மையச் செயலர் முல்லைவாசன் தலைமை வகிக்கிறார். தலைவர் கே.எம். பூபதி வரவேற்கிறார். 
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் முதல் விற்பனையைத் தொடங்கி வைக்கிறார். 
புத்தகங்களில் எத்தனைப் பேருலகம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைச் செயலர் நந்தலாலா சிறப்புரையாற்றுகிறார். 
இந்தப் புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் சிறந்த 16 பதிப்பகங்கள் சார்பில், 16 அரங்குகள் அமைக்கப்படும். 
காலை 9 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி வரை ஸ்டால்கள் திறந்திருக்கும்.
இங்கு விற்கப்படும் புத்தகங்களுக்கு 10 சதவீதக் கழிவு கிடைக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com