கருணை அடிப்படையில் விடுவிக்க சாந்தன், முருகன், நளினி வேண்டுகோள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் தமிழக ஆளுநர் கருணை


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் தமிழக ஆளுநர் கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அவர்களது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகியோரை அவர்களது வழக்குரைஞர் புகழேந்தி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுவிப்பதில் தமிழக ஆளுநர் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவரது முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதேசமயம், ஆளுநர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றும் நம்பிக்கை உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு ஆளுநர் எங்களை விடுவிக்க வேண்டும் என்று சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் போன்றவர்களுக்கு எழுதும் கடிதம் கருணை அடிப்படையிலானதுதான். இவை எந்த வகையிலும் அமைச்சரவை முடிவை பாதிக்காது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com