சந்தா தொகையை கையாடல் செய்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது வழக்கு

அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாதச் சந்தா தொகையை கையாடல் செய்துள்ள கேபிள் டிவி  ஆபரேட்டர்கள்

அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய மாதச் சந்தா தொகையை கையாடல் செய்துள்ள கேபிள் டிவி  ஆபரேட்டர்கள் மீதும், முறையாக சந்தா செலுத்துவோரை தொழில் செய்ய விடாமல் தடுப்போர் மீதும் காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருவதாக ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலூர் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 1,950 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பெயர் பதிவு செய்து பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அனலாக் சிக்னலை பெற்று ஒளிபரப்பு செய்தும், சந்தாதாரர்களிடம் மாதச் சந்தா தொகை வசூல் செய்தும் வருகின்றனர். இதில், சில ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய மாதக் கட்டணத்தைச் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளனர்.
அவ்வாறு கையாடல் செய்துள்ள உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவியின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை பெறாமலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் எவ்விதத் தொடர்பும் இல்லாமலும் தனியார் நிறுவனத்துக்கு முழுமையாக மாறியுள்ளனர். இது அரசை ஏமாற்றும் செயலாகும்.
அரசு நிறுவனத்தின் பங்குத் தொகையை கையாடல் செய்தவர்கள் மீதும், மாதச் சந்தா தொகையை முறையாக செலுத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் வயர்களைத் துண்டித்து தொழில் செய்ய விடாமல் தடுப்போர் மீதும்  சென்னை அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குநர் உத்தரவின்பேரில், கேபிள் டிவி தனிவட்டாட்சியரால் புகார் அளிக்கப்பட்டு, காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com