வேலூர்

தேசியத் தேர்வுகளுக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்: துணைவேந்தர் க.முருகன்

DIN

தேசிய அளவிலான தேர்வுகளுக்கு உரிய தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் வலியுறுத்தினார்.
 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக ஆங்கிலத் துறை மற்றம் ஆங்கில இலக்கிய சங்கம் சார்பில் தேசிய மற்றும் மாநில (நெட், செட்) தகுதித் தேர்வுகளுக்கான ஆய்வு வட்டம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு தலைமை வகித்து, தேசிய, மாநில (நெட், செட்) தகுதித் தேர்வுகளுக்குத் தேவையான பு த்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி துணைவேந்தர் க.முருகன் பேசியதாவது:
 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் அறிவுத் திறனுக்குத் தேவையான நூல்கள், ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வசதிகளை முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னுதாரண மாணவர்களாக திகழ வேண்டும்.
 தேசிய, மாநில (நெட், செட்) தகுதித் தேர்வுகளுக்கான ஆய்வு வட்டத்துக்குத் தேவையான புத்தகங்கள் படிப்படியாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படு ம். அதேபோல் மாணவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ள புத்தகங்களைத் தேடிச் சென்று படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், ஐஏஎஸ் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு தகுதி பெற முடியும் என்றார் அவர்.
 விழாவுக்கு பல்கலைக்கழகப் பதிவாளரும், ஆங்கிலத் துறைத் தலைவருமான வெ.பெருவழுதி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறைப் பேராசிரியர்கள் கதிரேசன், ரவிச்சந்திரன், அனிதா, தமிழினி மற்றும் பல்கலைக்கழக முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT