"ரயில்வே சுரங்கப்பாதைப் பணிகள் தாமதத்துக்கு தமிழக அரசுதான் காரணம்'

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதைப்  பணிகள் தாமதத்துக்கு தமிழக அரசுதான் காரணம் என்று இந்திய யூனியன்

வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதைப்  பணிகள் தாமதத்துக்கு தமிழக அரசுதான் காரணம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அபு பக்கர் கூறினார்.
வாணியம்பாடி நியூடவுன் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கடந்த ஒரு ஆண்டிற்கு முன் அப்பகுதியில் இருந்த ரயில்வே கேட் 
நிரந்தமராக மூடப்பட்டது. ஆனால் அந்த இடத்தில இருபுறமும்  15 அடி  பள்ளம் தோண்டப்பட்டு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஒரு ஆண்டு ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இந்நிலையில், வாணியம்பாடிக்கு சனிக்கிழமை வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலப் பொது செயலாளரும், கடையநல்லூர் எம்எல்ஏவுமான அபு பக்கர், நியூடவுன் ரயில்வே கேட் பகுதியை நேரில் பார்வையிட்டார்.  பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 
வாணியம்பாடி நியூடவுன் அப்பகுதியில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் அதிக அளவில் உள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கேட் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. ஓராண்டு ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. இதற்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டபோது பணிகள் தாமதத்துக்கு தமிழக அரசு காரணம் என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளளனர். 
எனவே, தமிழக  அரசு உடனடியாக சுரங்கப்பாதை அமைக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். 
பேட்டியின்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவர் நிசார் அஹமத், நகரத் தலைவர் எஸ்.எஸ்.பி.பாரூக் அஹமத், துணைத் தலைவர் ஷஹாபுத்தீன், நகரச் செயலாளர் நரிமுஹம்மத் நயீம், துணைச் செயலாளர் அக்பர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com