வேலூர் மாவட்டத்தில் 6 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 6 காவல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த 6 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ள நிலையில், அரசுத் துறைகளில் ஒரே பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருவோர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 
காவல் துறையிலும் உயரதிகாரிகள் தொடங்கி கீழ்நிலை காவலர்கள் வரை பணியிட மாற்றம் நடந்து வருகிறது. அந்தவகையில், வேலூர் மாவட்டத்தில் 6 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, வேலூர் மாவட்ட குற்ற ஆவணக் காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய பூஞ்செழியன் வேலூர் குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், காட்பாடி டிஎஸ்பி லோகநாதன் நெய்வேலி டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மதுவிலக்கு டிஎஸ்பி சங்கர் காட்பாடி டிஎஸ்பியாகவும், குடியாத்தம் டிஎஸ்பி பிரகாஷ்பாபு, போளூர் டிஎஸ்பியாகவும், நெய்வேலி டிஎஸ்பி சரவணன் குடியாத்தம் டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்ப்பட்டுள்ளனர்.
மேலும், அரக்கோணம் டிஎஸ்பி துரைபாண்டியன் திருவண்ணாமலை சமூக நீதி, மனித உரிமை டிஎஸ்பியாகவும், சிதம்பரம் டிஎஸ்பி பாண்டியன் அரக்கோணம் டிஎஸ்பியாகவும், திருப்பத்தூர் டிஎஸ்பி ஜேஸ்ராஜ் செய்யாறு டிஎஸ்பியாகவும், கடலூர் டிஎஸ்பி தங்கவேலு திருப்பத்தூர் டிஎஸ்பியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
இதற்கான உத்தரவை தமிழக காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com