அதிமுக வலுவான கூட்டணி அமைப்பதைக் கண்டு ஸ்டாலினுக்கு பதற்றம்: அமைச்சர் நிலோபர் கபீல்

கல்லூரிகளில் படித்து முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் அரசு வழங்கும் திறன்மேம்பாட்டு

கல்லூரிகளில் படித்து முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் அரசு வழங்கும் திறன்மேம்பாட்டு பயிற்சிகளையும், வேலைவாய்ப்பு முகாம்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் கேட்டுக் கொண்டார்.
 வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்  மாதனூர் எம்ஜிஆர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி, கருத்தரங்கம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இதனை தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் தொடங்கி வைத்துப் பேசியது:
மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். அதற்காக அரசு பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் புதிய கல்லூரிகளை தொடங்கியும், பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வாறு கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்கள் அரசு வேலையில் சேரவே விரும்புகின்றனர். ஆனால் அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது எளிதல்ல. நன்றாக படித்து போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இயலும். 
இதற்காக தமிழக அரசு மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் சார்பில் பல்வேறு இடங்களில் திறன் பயிற்சி அளித்து வருகிறது. இந்த திறன் பயிற்சிகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி தங்களை அடுத்தகட்ட நிலைக்கு மேம்படுத்திக்கொள்ள வேண்டும். 
மேலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம்களையும், போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 அத்துடன், வேலூர் மாவட்டத்தில் இயங்கும் மாதிரி தொழில்நெறி வழிகாட்டி மையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், வேலைதேடுவோருக்கும் உயர்கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசு அளித்து வரும் இந்தப் பயிற்சி வகுப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
"உயர்கல்வியும், வேலைவாய்ப்பும்' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வென்றவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார்.
 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஆர்.அருணகிரி, கல்லூரி முதல்வர் கோமதி, மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) வே.மீனாட்சி, பட்டய கணக்காளர்கள் தே.கலையழகன், விமல்நந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com