சிப்காட் ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம்

சிப்காட்  ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மகர ஜோதி தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சிப்காட்  ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மகர ஜோதி தரிசன விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் சபரி நகரில் உள்ள ஸ்ரீநவசபரி ஐயப்பன் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் மண்டல பூஜை நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து மகர ஜோதி தரிசன விழாவையொட்டி திங்கள்கிழமை காலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் கோயில் குருசாமி வ.ஜெயச்சந்திரன் தலைமையில் கோயில் மூலவரான ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. 
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருவாபரண யாத்திரையும், மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றன. அப்போது ஐயப்ப சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
அவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் 18-ஆம் படி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சபரி சாஸ்தா சமிதி குழுவினரின் பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், ராணிப்பேட்டை  சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஐயப்பனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் செய்யப்பட்டது.
அடுத்ததாக, இக்கோயில் பக்தர்கள் குழுவினர் இருமுடி கட்டுதல் மற்றும் சபரிமலை யாத்திரை விழா வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ளது.
தர்மசாஸ்தா கோயிலில்...
 மாதனூர் அருகே ஆர்.பட்டி கிராமத்தில் தர்மசாஸ்தா கோயிலில் மகரஜோதி தரிசனம், தங்கக் கவசம் அலங்கார நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.இதையொட்டி மாதனூர் திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து தங்கக் கவசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பாலூர் வலம்புரி விநாயகர் கோயிலில் இருந்து திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆர்.பட்டி தர்மசாஸ்தா அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com