பொங்கல் விழா: பாதுகாப்புப் பணியில் 1,500 போலீஸார்

பொங்கலையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கலையொட்டி, வேலூர் மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. 
பொங்கல் விழாவுக்குத் தேவையான பொருள்கள் வாங்க வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதலே பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டிருந்தனர். இதுதவிர, வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் குவிந்தனர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பணம், நகைத் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள் வெளியூர் சென்றதை அடுத்து பூட்டிய வீடுகளை குறிவைத்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இரவு நேர ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
அத்துடன், பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகள் நடத்தப்படுவதுடன், சந்தேகத்துக்குரிய நபர்களை உடனடியாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.  
இதேபோல், எருதுவிடும் திருவிழாக்கள் நடத்தப்பட உள்ள பகுதிகளிலும் முன்கூட்டியே போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com