விவசாயக் கடனை தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி வேலூரில் சனிக்கிழமை


ஏழை விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி வேலூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சிஐடியு, ஏஐகேஎஸ், ஏஐஏடபிள்யூ ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ சாலையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வ.அருள்சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் பி.துளசிநாராயணன், சிஐடியு மாவட்டச் செயலர் என்.காசிநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் பி.ரகுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், அத்தியாவசியப் பொருள்கள் மீதான முன்பேர வர்த்தகத்தைத் தடுக்க வேண்டும், விளை பொருள்களுக்கு சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி விலையைத் தீர்மானிக்க வேண்டும், கிராமப்புற வேலையுறுதித் திட்டத்தில் 200 நாள்கள் வேலையும், தினக்கூலியை ரூ. 400 ஆகவும் உயர்த்தி நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com