மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்

குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக் குழு

குடியாத்தம் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டக் குழு உறுப்பினருமான ஜி.லதா, கட்சியின்அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, அக்கட்சியின் வேலூர் மாவட்டச் செயலர் எஸ்.தயாநிதி, திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 
ஜி.லதா கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பு வகித்தவர். இவர் கட்சியின் அமைப்பு சட்டவிதிகளின்படி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கான ஓய்வூதியத் தொகையை கடந்த 16 மாத காலமாக கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், கடந்த ஓராண்டுகாலமாக கட்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. கட்சிக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. 
இதுதொடர்பாக அவரிடம் ஏற்கெனவே கேட்கப்பட்ட விளக்கத்துக்கும் உரிய பதில் அளிக்கவில்லை. இதற்காக அவர் 3 மாத காலம் மாவட்ட செயற்குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மீண்டும் கட்சியின் மாவட்டக் குழுவிலிருந்து பலமுறை கடிதம் அனுப்பியும் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டையும், ஒழுங்கையும் மீறியதற்காக ஜி.லதா மீது திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com