சமூக ஆர்வலருக்கு விஐடி, வீக் எண்ட் லீடர் சாதனையாளர் விருது

வேலூர் விஐடி, வீக் எண்ட் லீடர்  சாதனையாளர் விருது சமூக ஆர்வலரான பிந்தீஸ்வர் பதக்குக்கு அளிக்கப்பட்டது.

வேலூர் விஐடி, வீக் எண்ட் லீடர்  சாதனையாளர் விருது சமூக ஆர்வலரான பிந்தீஸ்வர் பதக்குக்கு அளிக்கப்பட்டது. ரொக்கப் பரிசு ரூ. 25 ஆயிரத்துடன் இந்த விருதை கர்நாடக மாநில முன்னாள் மக்கள் நீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ்ஹெக்டே வழங்கினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகமும், வீக் எண்ட் லீடர் பத்திரிகையும் இணைந்து சமூக மாற்றத்துக்கான செயல்களில் ஈடுபட்டு சாதனை படைத்து வரும் சமூக ஆர்வலர்களைத் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் கூடிய சாதனையாளர் விருதை வழங்கி வருகின்றன. 
அதன்படி, 2018-ஆம் ஆண்டுக்கான சாதனை விருது அமைதி, அஹிம்சை, தொழில்நுட்பம் மூலமான சமூக மாற்றத்துக்கான பள்ளி நிறுவனரும், சமூக ஆர்வலருமான பிந்தீஸ்வர் பதக்குக்கு வழங்கப்பட்டது. 
மனிதக் கழிவை மனிதனே அகற்றும் பணியை ஒழிக்க புதிய தொழில்நுட்பத்தின் மூலம் குறைந்த செலவிலான கழிப்பறை அமைக்கும் திட்டத்தை உருவாக்கியதற்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
விஐடி மேலாண்மைப் பள்ளி சார்பில் புதன்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு விஐடி பல்கலைக்கழகப் பதிவாளர் கே.சத்தியநாராயணன் தலைமை வகித்தார். விஐடி மேலாண்மைப் பள்ளி முதல்வர் சுபஸ்ரீ வரவேற்றார். இதில், பிந்தீஸ்வர் பதக்குக்கு ரூ. 25ஆயிரம் வெகுமதியுடன் சுழற்கோப்பையை கர்நாடக மாநில முன்னாள் மக்கள் நீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ்ஹெக்டே வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com