ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது

கோவையில் சரக்குகளை அனுப்பாமல் வெறுமனே ரசீதுகளை மட்டும் போட்டு கோடிக்கணக்கில் வரி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் உள்ளிட்ட 2 பேர் கைது


கோவையில் சரக்குகளை அனுப்பாமல் வெறுமனே ரசீதுகளை மட்டும் போட்டு கோடிக்கணக்கில் வரி மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோவை ஜி.எஸ்.டி. ஆணையர் ஜி.சீனிவாச ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் சில தொழில் நிறுவனங்கள் சரக்குகளை அனுப்பாமல், அவற்றை அனுப்பியதாக ரசீதுகளை மட்டும் சமர்ப்பித்து அதற்கான உள்ளீட்டு வரிகளைத் திரும்பப் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் புகார்கள் கிடைத்தன. இது தொடர்பாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், எம்.மாணிக்கம் என்பவர் ரூ.5 கோடிக்கும் அதிகமாகவும், எம்.சந்திரமோகன் என்பவர் சுமார் ரூ.4.95 கோடி வரையிலும் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதில் மாணிக்கம் என்பவர் இரும்பு, ஸ்டீல் விற்பனையில் ஈடுபட்டிருப்பவர். சந்திரமோகன், தன்னை பழைய இரும்பு வியாபாரி என்று பதிவு செய்து கொண்டு வெறுமனை ரசீதுகளை மட்டுமே தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இவர்கள் இருவர் மீதும் 2017 ஜி.எஸ்.டி. சட்டம் பிரிவு 132-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com