குரூப் 2 தேர்வு: கோவையில் 16,951 பேர் எழுதினர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வை கோவையில் 16,951 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 2 தேர்வை கோவையில் 16,951 பேர் ஞாயிற்றுக்கிழமை எழுதினர்.
சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்தத் தேர்வுக்கு மாநிலம் முழுவதிலும் சுமார் 6.26 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். கோவை மாவட்டத்தில் 25,641 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்காக மாவட்டம் முழுவதிலும் 90 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுகளில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக துணை ஆட்சியர்கள் நிலையில் 11 பறக்கும் படை அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 24 அலுவலர்கள், 90 அறைக் கண்காணிப்பாளர்கள், 58 முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
 மாவட்டம் முழுவதும் 16,951 பேர் தேர்வு எழுதினர். 8,690 பேர் தேர்வுக்கு வரவில்லை. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு பகல் 1 மணி வரை நடைபெற்றது. 
இந்தத் தேர்வு கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் எளிதாக இருந்ததாகத் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com