மின் இணைப்பு துண்டிப்பு: வீடுகளை காலி செய்த சி.எம்.சி. காலனி மக்கள்

மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருந்து குடியிருப்புகளை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்காக காலி செய்யுமாறு மாநகாரட்சி நோட்டீஸ் அளித்து இருந்தது. இந்நிலையில், காலி செய்யாத குடியிரு

மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு இருந்து குடியிருப்புகளை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிக்காக காலி செய்யுமாறு மாநகாரட்சி நோட்டீஸ் அளித்து இருந்தது. இந்நிலையில், காலி செய்யாத குடியிருப்புகளின் மின் இணைப்பு திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டதால் சி.எம்.சி. காலனி மக்கள் தங்களது வீடுகளை காலி செய்தனர்.
கோவை, உக்கடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தமிழக அரசு சார்பில் ரூ. 121 கோடி மதிப்பில் உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மேம்பாலப் பணிக்காகத் தேவைப்படும் நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தி நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
இதில், பேரூர் பைபாஸ் சாலை அமைந்துள்ள சி.எம்.சி. காலனி பகுதி வழியாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த இடம் மாநகராட்சிக்குச் சொந்தமானது. அங்கு ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் 209 குடியிருப்புகள் அமைந்துள்ளன.
அந்த நிலத்தைக் கையகப்படுத்த அங்குள்ள குடியிருப்புகளை காலி செய்ய கடந்த ஜூன் மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
அந்த நோட்டீஸை ஏற்று பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து மலுமிச்சம்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட குடியிருப்புகளுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால், சிலர் வீடுகளை காலி செய்யாமல் அப்பகுதியிலேயே வசித்து வந்தனர். இதையடுத்து, பலமுறை எச்சரித்தும் அவர்கள் வீடுகளை காலி செய்யவில்லை. இதனால் மேம்பாலப் பணிகளின் தாமதம் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, காலி செய்யாத குடியிருப்புகளின் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் திங்கள்கிழமை துண்டித்தனர். இதையடுத்து குடியிருப்புவாசிகள் தங்களது வீடுகளை காலி செய்யத் தொடங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com