கோவையில் மறியலில் ஈடுபட்ட  மின்வாரிய ஊழியர்கள் 80 பேர் கைது

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் 80 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மின் வாரியம் அறிவித்த தினக் கூலி ரூ.380ஐ வழங்க வேண்டும். மின்சார வாரியத்தில் காலியாக உள்ள சுமார் 42 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 
தீபாவளி கருணைத் தொகையை அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மறியல் போராட்டம் அறிவித்திருந்தது.
கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலர் வி.மதுசூதனன் தலைமை வகித்தார். 
சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ஆறுமுகம், மாவட்டச் செயலர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். 
இதைத் தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.  
இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி போலீஸார், மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் அருள்ராஜ், விவேகானந்தன், மணிகண்டன் உள்ளிட்ட சுமார் 80 மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களை கைது செய்தனர்.  பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com