முருகன் கோயில்களில் கந்த சஷ்டித் திருவிழா

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவில்பாளையம் காலகாலைஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழாவை முன்னிட்டு  கடந்த  8ஆம் தேதி காலை  சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காப்புக் கட்டுதல், கொடியேற்றுதல் நடைபெற்றது. தொடர்ந்து 12ஆம் தேதி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 
இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.  காலை 11 மணிக்கு கரட்டுமேடு ரத்தினகிரி மருதாசல சுவாமி கோயிலில்  வேல் பூஜை மற்றும் வேல் வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து சூரசம்ஹாரம் நடைபெற்றது. 
நவம்பர் 14ஆம் தேதி காலை 10 மணிக்கு வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 11 மணியளவில் வள்ளி தெய்வானையுடன் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் ஜெயசெல்வம், தக்கார் விஸ்வநாதன் மற்றும் கட்டளைதாரர்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
மேட்டுப்பாளையத்தில்...: மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலையில் முருகப் பெருமான் கோவிலில் சூரசம்ஹாரவிழா கடந்த 8ஆம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது. கட்டளைதாரர் சுகன்யா ராஜரத்தினம், கோவைஅறநிலையத் துறை உதவி ஆய்வாளர் விமலா, செயல் அலுவலர் மற்றும் தக்கார் பெரிய மருதுபாண்டியன், ஆய்வாளர் சரண்யா உள்பட முருக பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி புதன்கிழமை சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
ராமநாதபுரத்தில்...: இதேபோல், கோவை ராமநாதபுரம் அருள்மிகு வேல்முருகன் கோயில்,  ஒலம்பஸ் 80 அடி சாலையில்உள்ள பழனி ஆண்டவர் கோயிலில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com