கணுவாய் தடுப்பணையில் முகாமிட்ட 2 காட்டு யானைகள் விரட்டியடிப்பு

கோவை, கணுவாய் தடுப்பணையில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை விரட்டினர்.

கோவை, கணுவாய் தடுப்பணையில் முகாமிட்டுள்ள 2 காட்டு யானைகளை வனத் துறையினர் பல மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை விரட்டினர்.
கோவை மாவட்டம், துடியலூரை அடுத்த சின்னத்தடாகம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த இரு மாதங்களாக இரு காட்டு யானைகள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகளை விரட்ட சாடிவயலில் இருந்து இரு கும்கிகள், முதுமலையில் இருந்து இரு கும்கிகள் என நான்கு யானைகள் வரப்பாளையம் கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 
இந்நிலையில், பாப்பநாயக்கன்பாளையம், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் பகுதியில் 6 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில் நுழைந்தன. மேலும், அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களையும் சேதப்படுத்தின.
இதையடுத்து, ஒரு மக்னா மற்றும் ஆண் யானை என இரு யானைகள்  மட்டும் வழிதவறி கணுவாய் தடுப்பணை பகுதிக்கு வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் சென்று விட்டன. இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் கொடுத்த தகவலின்படி கோவை வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். எனினும் அதிக அளவில் பொதுமக்கள் திரண்டதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் தெய்வு ஏற்பட்டது. 
இதைத் தொடர்ந்து கணுவாய் தடுப்பணையில் இருந்து இரு காட்டு யானைகளையும் 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் சோமையனூர் வழியாக வனப் பகுதிக்குள் வனத் துறையினர் விரட்டினர். இந்தச் சம்பவம் காரணமாக கணுவாய் தடுப்பணை பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com