கோயம்புத்தூர்

பதவி ஏற்றார் வேளாண் பல்கலை. துணைவேந்தர்

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.குமார் (63) வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார்.
 கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 12ஆவது துணைவேந்தராக கு.ராமசாமி கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இரண்டாவது முறையாக இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவரது பதவிக் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது. 
முன்னதாக, புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதிய துணைவேந்தராக என்.குமாரை நியமித்து ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டார்.
 பல்கலைக்கழகத்தின் 13ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்ட என்.குமார், தோட்டக் கலைத் துறையில் பி.ஹெச்டி. பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தின் தோட்டக் கலைத் துறையில் முதல்வராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இந்நிலையில் புதிய துணைவேந்தராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட குமார், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT