செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை

DIN | Published: 12th September 2018 06:42 AM

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.18 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் தொடக்கி வைத்தார்.
கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 22 ஆவது வார்டு காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க ஆழ்துளை கிணறு அமைத்து, நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 20 லிட்டர் வீதம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ரூ.18 லட்சம் மதிப்பில் நடைபெற உள்ள பணியை கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் பூமி பூஜை போட்டு தொடக்கி வைத்தார். இப்பணி நிறைவடைந்தவுடன் ஒவ்வொரு வீட்டுக்கும் ரகசிய குறியீடுடன் நவீன அட்டை வழங்கப்படும். இந்த அட்டையை பயன்படுத்தி ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு 20 லிட்டர் குடிநீரை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல் கிக்கானி மேல்நிலைப் பள்ளி அருகே ரூ.13.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியையும் அம்மன் கே.அர்ச்சுணன் தொடக்கி வைத்தார்.

More from the section

அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமானங்கள்: தகவல் பலகை வைக்கக் கோரிக்கை
கோப்பனாரி ஆதிவாசி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவி
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வருமா சிறுநீரக சுத்திகரிப்பு மையம்?
ரயில் மோதி இளைஞர் சாவு
இந்து அமைப்பு நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு