செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

கார் மோதியதில் இளைஞர் சாவு

DIN | Published: 12th September 2018 06:41 AM

கோவை அருகே தென்னம்பாளையத்தில் கார் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். 
கோவை அருகே சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்  மகன் சதீஷ் (18). இவர் தென்னம்பாளையம் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 
திங்கள்கிழமை இரவுப்  பணிக்கு சென்ற சதீஷ்,  சுமார் 9 மணி அளவில் உணவு அருந்த அவிநாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார், சதீஷ் மீது மோதியது.  இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from the section

அரசு சார்பில் கட்டப்படும் கட்டுமானங்கள்: தகவல் பலகை வைக்கக் கோரிக்கை
கோப்பனாரி ஆதிவாசி கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவி
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் செயல்பாட்டுக்கு வருமா சிறுநீரக சுத்திகரிப்பு மையம்?
ரயில் மோதி இளைஞர் சாவு
இந்து அமைப்பு நிர்வாகி வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு