வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

கோவையில் கிரெடாய் சார்பில்  கட்டுமானத் துறை கண்காட்சி

DIN | Published: 12th September 2018 06:42 AM

கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் வளர்ச்சி சங்க கூட்டமைப்பு) சார்பில் 10ஆவது கட்டுமானம் தொடர்பான கண்காட்சி செப்டம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது . இதில் ஏராளமான தொழில் வர்த்தக அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக கிரெடாய் தலைவர் சுரேந்தர்  விட்டீல் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் கூறியதாவது:
கோவை, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் கிரெடாய் சார்பில் செப்டம்பர் 14ஆம் தேதி கட்டுமானத் துறை கண்காட்சி தொடங்குகிறது. 16ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் 25 முன்னணி கட்டுமான நிறுவனங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
கண்காட்சியில் பல அடுக்குமாடி குடியிருப்புகளின் மாதிரி வடிவமைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. அதில் சில மாதிரி குடியிருப்புகள் சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ளவைகள் ஆகும். இந்தக் கண்காட்சி காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையில் மூன்று நாட்களும் நடைபெறும். கண்காட்சியில் 5 வங்கிகள்,  நிதி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன என்றார்.  உடன், துணைத் தலைவர் மதன்.பி லுன்ட்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More from the section

பேருந்து மோதி கல்லூரி மாணவர் சாவு


ஆணையூர் அரசுப் பள்ளிக்கு தனியார் நிறுவனம் நிதி உதவி

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவையில் டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் சாவு
அவினாசிலிங்கம் நினைவு சொற்பொழிவு