23 செப்டம்பர் 2018

சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN | Published: 12th September 2018 06:41 AM

மேட்டுப்பாளையத்தில் சொந்த வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் அனைத்து இந்தியா சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எம்.மோகனகிருஷ்ணன், செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.  
இதுகுறித்து மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது: நாங்கள் மேட்டுப்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக வாகனத் தொழில் செய்து வருகிறோம். ஆனால் எங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், சட்டத்துக்கு புறம்பாகவும் சிலர் சொந்த வாகனங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விடுகின்றனர். இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், எங்களது தொழிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி சொந்த வாகனங்களை வாடகைக்கு விடும் நபர்கள் மீது எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

More from the section

கீரணத்தம் ஊராட்சியில் பொது இடத்தில் குப்பை கொட்டிய லாரி பறிமுதல்
பழங்குடியின மக்களுக்கு வனத் துறை உதவி
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
மருத்துவமனைகள் இருந்தும் சிகிச்சை பெற முடியாமல் அவதி
சூலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது: ரூ.10.85 லட்சம், வாகனங்கள் பறிமுதல்