புதன்கிழமை 26 செப்டம்பர் 2018

டெங்கு காய்ச்சல் பாதிப்பு:  கோவையில் மூவருக்கு சிகிச்சை

DIN | Published: 12th September 2018 06:41 AM

டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் கோவை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்தது. அன்னூர் வட்டம், அல்லிகாரன்பாளையத்தைச் சேர்ந்த கலைவாணி (52), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலசந்திரன் (23) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 
இந்நிலையில் தற்போது கோவையைச் சேர்ந்த மூன்று பேர், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொன்னையா என்பவரும் சிகிச்சை பெற்று  வருகிறார்.
 

More from the section

அன்னூர் ஒன்றியத்தில்  16 கூட்டுறவுச் சங்கங்களில் 9ஆவது நாளாக கடன் வழங்கா போராட்டம்
கோவை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை
காங்கிரஸ், திமுகவை போர்க்குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும்: எஸ்.பி.வேலுமணி


சசிகுமார் கொலை: சர்வதேச விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தல்

ஆங்கில நூல் அறிமுக விழா