கோயம்புத்தூர்

கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயக் கலை, அறிவியல் கல்லூரியில் "தமிழில் கடைக்காப்பு' எனும் தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பொன்னுசாமி வரவேற்றார். 
தமிழ்த் துறைத் தலைவர் சண்முகம் கருத்தரங்கின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.வித்யாலயக் கல்வி நிறுவனங்களின் செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து, ஆய்வுக் கோவையை வெளியிட்டார். தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க அமர்வுகளில், பன்னிரு திருமுறைகளிலும், நாலாயிர திவ்யப் பிரபந்தங்களிலும் காணப்படும் ஓர் அமைப்பான கடைக்காப்புப் 
பாடல்களின் வாயிலாக வெளிப்படும் வரலாறு, மெய்யியல், கலை, சமூகவியல், வாழ்வியல் போன்ற கருத்துக்கள் குறித்து ஆய்வறிஞர்கள் விவாதித்தனர். 
நிறைவு விழாவில் கல்லூரிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்  இரா.ஆனந்த் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT