குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை

குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில்

குறுந்தொழில் முனைவோருக்கு தனியாக தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்) வலியுறுத்தியுள்ளது.
டேக்ட், மாவட்டத் தொழில் மையம், ஆந்திர மாநில தொழில், தொழில்நுட்ப ஆலோசனை மையம் (அபிட்கோ) ஆகியவற்றின் சார்பில் சிறுதொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் குறித்த கருத்தரங்கு கோவை சிந்தாமணிபுதூரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மாவட்டத் தொழில் மையத்தின் உதவிப் பொறியாளர் பிருந்தாதேவி பங்கேற்றுப் பேசும்போது, மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் சிறு, குறு தொழில் முனைவோருக்கு ரூ.25 ஆயிரத்துக்குள் தொழில் தொடங்குபவர்களுக்கு 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதைத் தவிர குறிப்பிட்ட சில பொருள்களின் உற்பத்திக்காக இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ. 5 கோடி வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், பிரதமரின் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழும் மானியம் வழங்ப்படுகிறது. இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம் என்றார்.
டேக்ட் சங்கத் தலைவர் ஜே.ஜேம்ஸ் பேசும்போது, ஏற்கெனவே உள்ள தொழில்பேட்டைகளில் போதுமான அளவுக்கு இடம் இல்லாததால், குறுந்தொழில் முனைவோருக்கு என கோவையில் தனியாக ஒரு தொழில்பேட்டை அமைக்க வேண்டும். தமிழகத்தில் பரவலாக மின்வெட்டு அமலில் இருந்தாலும் கோவையில் மட்டும் இல்லாதிருப்பதற்கு இங்குள்ள தொழில் முனைவோர் ஒற்றுமையாக இருப்பதே காரணம். குறுந்தொழிலை மேம்படுத்துவதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் கிளஸ்டர் கிராப்ட் நிர்வாக இயக்குநர் ராஜ வீர் சிங், அபிட்கோ அலுவலர் ஸ்ரீதர், சிட்பி மேலாளர் ராஜூ, டேக்ட் செயலர் பிரதாப் தனசேகர், துணைத் தலைவர் ஏ.விஸ்வநாதன், சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com