வன எல்லை ஆய்வு குறித்து பயிற்சி

வன எல்லை ஆய்வு செய்து அளவை மேற்கொள்வது குறித்து 4  நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவுபெற்றது.

வன எல்லை ஆய்வு செய்து அளவை மேற்கொள்வது குறித்து 4  நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவுபெற்றது.
வனப் பகுதி எல்லைகளைக் கண்டறிந்து அளவை செய்ய வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இப்பணியில் ஈடுபடவுள்ள வனத் துறையினருக்கான பயிற்சி வகுப்பு வால்பாறையை அடுத்த அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. 
பயிற்சி முகாமை ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் துவக்கி வைத்தார். 
முகாமில்,  வன எல்லையைக் கண்டறிந்து நில அளவை மேற்கொள்வது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில்,  பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனச் சரக அலுவலர்கள், வனவர்கள் மற்றும் வனக் காவலர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com