கோயம்புத்தூர்

சூலூர் அருகே பணம் வைத்து சூதாடிய 20 பேர் கைது: ரூ.10.85 லட்சம், வாகனங்கள் பறிமுதல்

DIN

சூலூரை அடுத்த ஆச்சாங்குளக்கரையில் பணம் வைத்து சூதாடிய 20 பேரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 10 லட்சத்து 85 ஆயிரம், கார்கள், இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம், சூலூரை அடுத்த குளத்தூரில் ஆச்சாங்குளம் உள்ளது. இக்குளத்தில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். குளக்கரையில் மீனவர்கள் தங்க கொட்டகை உள்ளது. இக்கொட்டகைக்கு அடிக்கடி வெளி ஆள்கள் வந்து செல்வதாகவும், இரவில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் வந்தது. இதுகுறித்து விசாரிக்க அப்பகுதிக்கு சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் போலீஸார் சென்றனர்.
அப்போது, ஆச்சாங்குளம் மீனவர் குடிலில் குளத்தூர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரிக்குட்டி உள்பட 20 பேர் பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து சூலூர் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கோவை, ஆவாரம்பாளையத்தைச் ஜி.துரைசாமி(44), ஆர்.எஸ்.புரம் அருணாச்சலம் வீதியைச் சேர்ந்த கண்ணன்(43), காந்திபுரம் ரத்தினபுரி சுப்பாத்தம்மாள் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர்(27), வெள்ளானைப்பட்டி முத்துகுமாரசாமி (48), அதே பகுதி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த ராஜேஷ்(24), கணபதி ராஜவீதி சுரேந்தர்பாபு (42), கோவை பழையன்தொட்டம் ஹவுஸிங் யூனிட்டைச் சேர்ந்த சுரேஷ்குமார்(37), பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி சாலை சதீஷ்குமார்(30), சூலூர் கருப்பபோயன்வீதி ராமசந்திரன்(40), திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் வீதியைச் சேர்ந்த நாகராஜ்(38), நீலம்பூர் மேற்கு வீதியைச் சேர்ந்த தியாகராஜன்(35), திருப்பூர் பாண்டியன் நகர் பாண்டி (28), கோவை, செல்வபுரம் சிராஜுதீன்(39), வேலாண்டிபாளையம் ஜீவானந்தம் வீதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாச பெருமாள்(44), சுக்ரவார்பேட்டை, பட்டிநாயக்கர் வீதியைச் சேர்ந்த அங்குராஜ்(40), சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியைச் சேர்ந்த பாபு (38), பூமார்க்கெட் மகாலிங்கம் கோயில் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (36), செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி வெங்கடேஷ்வரா லே அவுட்டைச் சேர்ந்த ராமு (43), குளத்தூர் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் மாரிக்குட்டி(50) உள்ளிட்டோர் என தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் பணம் வைத்து சூதாடிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயன்படுத்திய நான்கு சொகுசு கார்கள், நான்கு இரு சக்கரவாகனங்கள் மற்றும் அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT