சிறுவாணி அணைப் பகுதியில் நீர்க் கசிவு: கேரள அதிகாரிகள் ஆய்வு

சிறுவாணி அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவு குறித்து கேரள பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சிறுவாணி அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவு குறித்து கேரள பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
 கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாகத் திகழும் சிறுவாணி அணையில் இருந்து மாநகாரட்சியில் உள்ள 26 வார்டுகள் மற்றும் வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள சிறுவாணி அணை, கடல் மட்டத்தில் இருந்து 863.4 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையில் 863.4  மீட்டரில் இருந்து 878.5 மீட்டர் (50 அடி) அளவுக்குத் தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். 
 கேரள மாநில எல்லையில் சிறுவாணி அணை அமைந்துள்ளதால் அணையின் கட்டுப்பாடு கேரள அரசின் பொதுப் பணித் துறையிடம் உள்ளது. மேலும், அணையில் இருந்து குடிநீர் பெறுவதால் அணைப் பராமரிப்புக்கு ஆன செலவினத் தொகை மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் கேரள அரசுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
 மேலும், சிறுவாணி அணையில் இருந்து நாளொன்றுக்கு குடிநீர் விநியோகத்துக்காக சராசரியாக 10 கோடி லிட்டர் அளவுக்குத் தண்ணீர் எடுக்கப்படும். இந்நிலையில், கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்தது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்த பலத்த மழை காரணமாக ஜூலை மாதத்தில் சிறுவாணி அணை தனது முழுக் கொள்ளளவை இரண்டு முறை எட்டியது.  
 இதனால் அணைப் பகுதிகளில் போதிய அளவுக்குப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தென்மேற்குப் பருவ மழை முடிவடைந்து, அணையின் நீர்மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அணையில் ஆங்காங்கே நீர்க் கசிவு ஏற்பட்டது.
 இதையடுத்து, நீர்க் கசிவை சரி செய்ய கேரள பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com