கோயம்புத்தூர்

ரூ. 1 கோடி கையாடல்: கணக்காளர் மீது வழக்குப் பதிவு

DIN

கோவை துடியலூரில் உள்ள பின்னலாடைத் தொழிற்சாலையில் ரூ. 1 கோடி கையாடல் செய்த கணக்காளர் மீது மாவட்டக் குற்றப் பிரிவுக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
கோவை, துடியலூரில் தனியாருக்குச் சொந்தமான பின்னலாடைத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் இருகூரைச் சேர்ந்த உதயநிதி (31) கணக்காளராகப் பணியாற்றி வந்தார். பின்னலாடை தயாரிக்க மூலப் பொருள்கள் அனுப்பும் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலமாகப் பணம் அனுப்பும் பொறுப்பையும் கவனித்து வந்தார். 
இந்நிலையில், தொழிற்சாலைக்கு சொந்தமான ரூ. 1 கோடியே 1 லட்சத்தை தனது பெயரிலும், தனது உறவினர்கள் பெயரிலும் வங்கியில் செலுத்தி கையாடல் செய்தது தெரியவந்தது. 
இதுகுறித்து, கோவை மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையில் நிறுவனத்தின் அதிகாரி சக்தி புகார் அளித்துள்ளார்.
 அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் உதயநிதியைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT