ஆங்கில நூல் அறிமுக விழா

சிறுத்தையின் வாழ்க்கை முறை தொடர்பான "லெப்பர்டு ஆன் தி ராக்ஸ்' எனும் ஆங்கில நூலின் அறிமுக விழா கோவையில் அண்மையில் நடைபெற்றது.

சிறுத்தையின் வாழ்க்கை முறை தொடர்பான "லெப்பர்டு ஆன் தி ராக்ஸ்' எனும் ஆங்கில நூலின் அறிமுக விழா கோவையில் அண்மையில் நடைபெற்றது.
ராஜஸ்தானைச் சேர்ந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞரும், டாக்டருமான சஞ்சீத் மன்காட், சிறுத்தையின் வாழ்க்கை முறை, அவற்றைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து "லெப்பர்டு ஆன் தி ராக்ஸ்' எனும் நூலை எழுதியுள்ளார். 
இதன் அறிமுக விழா கோவை அக்மி ரவுண்ட் டேபிள்-133 எனும் அமைப்பின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர் விமல்குமார் தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரிக்கால் நிர்வாக இயக்குநர் விக்ரம் மோகன் சிறப்பு  விருந்தினராகப் பங்கேற்று, நூலாசிரியரிடம் இருந்து நூலைப் பெற்றுக் கொண்டார். 
நூலாசிரியர் சஞ்சீத் மன்காட் ஏற்புரையாற்றினார். இதில், ரவுண்ட் டேபிள் நிர்வாகிகள் விமல்குமார், அஸ்வின், அசோக் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com