கோயம்புத்தூர்

மருதூர் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

DIN


காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் முடிந்து பல்வேறு கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
முன்னதாக புலவர் தாச.அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவு, முத்துக்கல்லூர், சுண்டக்கரைப்புதூர் மற்றும் காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பக்தி பஜனை   நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மேட்டுப்பாளையம், உதகை, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்கனூர், தாயனூர், வெள்ளியங்காடு மற்றும் தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  ஆஞ்சநேயர் பக்தர்கள் குழு சார்பில் விழா ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT